அடுத்த முதலமைச்சரின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் எப்போது? எந்த மாவட்டங்கள்?

 05.03.2023 & 06.03.2023 ஆகிய நாட்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முதலமைச்சரின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்!

மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.


மாவட்டங்களில் மக்கள் நல திட்டங்கள் முறையாக செல்லவேண்டும், அதே போன்று அங்குள்ள மாவட்ட நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அதனை ஒரு திட்டமாக செயல்படுத்தும் விதமாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டமானது செயல்படுத்தப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த திட்டம் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அடுத்தகட்டமாக மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை பொறுத்த வரை அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், விவசாயக்குழு பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்களுடன் ஆலோசனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோல மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு செயல்பட்டுவருகிறது, மேலும் மக்களுடைய பிரச்சனைகளை அனைத்திலும் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment