பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.01.2023
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்.
அதிகாரம் - செய்நன்றி அறிதல்.
குறள் : 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
விளக்கம்:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது
பழமொழி :
A sound mind in a sound body
வலுவான உடலில் தெளிவான மனம்
இரண்டொழுக்க பண்புகள் :
1.புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன்.
2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. அனைவரையும் நேசிப்பேன்.
பொன்மொழி :
வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்
பொது அறிவு :
1. இந்தியாவின் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற நாள் எது?
மே 13 ,1952.
2. இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி யார்?
மீரா சாகிப் பாத்திமா பீவி.
English words & meanings :
knead -massage. verb. பிசைதல். வினைச் சொல். need -desire. verb. ஆசை. வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
தினசரி பயன்படுத்தும் சமையலில் விதவிதமான பயிறு வகைகள் இடம் பெற்றாலும் குளிர் காலங்களில் அதிகமாகக் கிடைப்பது மொச்சைப் பயறு. குறிப்பாக பொங்கல் சமயங்களில் இந்த மொச்சைப்பயறை விதவிதமாக சமைத்து சாப்பிடுவார். நாட்டு காய்கறிகளில் முக்கிய இடம் பிடித்த இதில் ஏராளமான ஊட்டச்ச்த்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்தக் கூடியது.
NMMS Q
அறை வெப்பநிலையில் நீர்மமாக காணப்படாதது எது? ________
விடை: Cs
நீதிக்கதை
முதலையும்,நண்டும்
ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.
கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.
அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.
செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.
இன்றைய செய்திகள் - 18.01.2023
* டிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் சிவில் நீதிபதி தேர்வு அறிவிக்காததால் இளம் வழக்கறிஞர்கள் ஏமாற்றம்.
* தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment