பள்ளி மாணவர்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், வாசிக்கவும் செய்வதற்கு, 'மிஷன் டெல்டா' என்ற திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவ - மாணவியரில் பலர், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறையில், அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
அவர்களில் சில மாணவர்கள், 10ம் வகுப்பு வந்த பிறகும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதவும், வாசிக்கவும் திணறுகின்றனர்.
இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த வரிசையில், 'மிஷன் டெல்டா' என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. முதலில், தஞ்சாவூர் மாவட்டத்தில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அடிப்படையாக மொழி அறிவு பெறாத மாணவர்களை பள்ளி வாரியாக கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், நடப்பு கல்வி ஆண்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், வாசிக்கவும் கற்றுத் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment