எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ தொகுத்தறி (SA) தேர்வு பற்றிய சந்தேகமும் , அதற்கு உரிய விளக்கமும்.

 கேள்வி:1.

 TN EMIS APP மூலம் தொகுத்தறி தேர்வு நடத்த வேண்டுமா?


*ஆம்... கட்டாயம் TN EMIS APP மூலம் Online வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் 23.12.2022 வரையிலான கால கட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இந்த Online தேர்வு மதிப்பீடு மட்டுமே தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படும்*


கேள்வி:2.


 TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF எழுத்து தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமா? 


அப்படி வினாத்தாள்கள் வழியே வைக்கப்படும்  தொகுத்தறி மதிப்பீடு கணக்கில் தொகுத்தறி மதிப்பீடாக (SA) ஏற்றுக் கொள்ளப்படுமா?


* TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF வடிவிலான வினாத்தாள்கள் கொண்டு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வை கட்டாயமாக நடத்த தேவையில்லை...

 * Optional ஆக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழியே எழுத்து தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பும் ஆசிரியர்கள்  வினாத்தாள்கள் வழியே தொகுத்தறி தேர்வை Online தேர்வுடன் இணைந்து நடத்தி கொள்ளலாம்*


* அப்படி வினாத்தாள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு தொகுத்தறி தேர்வு நடத்தினாலும் அந்த மதிப்பீடை தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்பாடாது


கேள்வி:3. 


1 & 2 &3ம் வகுப்புக்குரிய தொகுத்தறி PDF வினாத்தாள்கள் BRC மூலம் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படுமா?


* BRC மூலம் விலையில்லாமல் வினாத்தாள்கள் வழங்கப்படாது.... எழுத்து தேர்வை விரும்பும் 1 & 2 & 3ம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் தாமே தமது சொந்த பொறுப்பில் வினாத்தாள்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


0 Comments:

Post a Comment