ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சமக்ரா சிக்ஷா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக ஆர்.சுதன் இருந்து வந்தார். இவர் பள்ளிக்கல்வித் துறையில் பவ்லேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தவர். பள்ளிக்கல்வி செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினார். அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களின் டிஜிட்டல் வருகைப் பதிவை கொண்டு வந்தார்.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், 15.12.2022 முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொறுப்பை, இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பு பணியாக கண்காணித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.இளம்பகவத், முழு கூடுதல் பொறுப்பாக, அந்த இடத்தில் மற்றொரு அதிகாரி நியமிக்கப்படும் வரை கவனிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment