Virtual Reality Library in Tamilnadu Schools!

 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 22 - 23ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் சட்டமன்ற பேரவையில் "மெய்நிகர் நூலகம் " ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நூலகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள், மாணவர்கள் பயன்படுத்துவதில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் ( Virtual Reality Library) 76 நூலகங்களில் ஏற்படுத்தப்படும் திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்,


தமிழகத்தில் பொது நூலக இயக்கத்தின் கீழ் செயல்படும் 32 மாவட்டங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 38 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு இரண்டு நூலகங்கள் என மொத்தம் 76 நூலகங்களுக்கு தலா ஒரு நூலகத்திற்கு இரண்டு மெய்நிகர் தொழில்நுட்ப கருவி மீதம் 152 நவீனத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழிற்பக் கருவி (Virtual Reaity Library) ரூபாய் 65.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்துக்கு இரண்டு கருவிகள் வீதம் 152 மெய் நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது,

மேலும் இக்கருவிகள் இடம்பெறும் நூலகங்களில் 155 நூலகங்களுக்கு இக்கருவியினை பயன்படுத்துவது தொடர்பாக விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

மெய் நிகர் தொழில்நுட்பம் என்பது மெய்யான சூழலை அதன் தோற்றம்,வடிவம் மாறாமல் கண்டு, கேட்டு உணரும் வகையில் உருவகப்படுத்தப்பட்ட அனுபவமாகும்,அச்சூழல் மெய்யான உலகத்தை ஒத்ததாக அல்லது முற்றிலும் புது அனுபவமாக இருக்கும்.

புகைப்படம், வீடியோ, கணினி அனிமேஷன் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும் ,

விர்ச்சுவல் ரியாலிட்டியின் பயன்பாடுகளில் குழந்தைகளுக்கான, கல்வி, மருத்துவம் அல்லது அறிவியல்
 பயிற்சிகள் ஆகியவை அடங்கும்..


0 Comments:

Post a Comment