29 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: நவ. 26 வகுப்பு தொடக்கம்

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 414 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும்.


இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம்வழங்கப்படுகிறது. ஒரு பிளாக்கிற்குஒரு மையம் என 414 மையங்கள் நீட் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் என தமிழகம் முழுவதும் 29,000 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தோறும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்


.இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது: நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 10 மையங்களில் 700 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 100 முதுகலை ஆசிரியர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாணவர்களுக்கு இதற்கான பாடகுறிப்புகள் வழங்கப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment