திருக்குறள் :
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
குறள் : 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
பழமொழி :
Be still and have thy will.
அமைதியாய் இரு. விரும்பியதை பெறுவாய்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்
2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.
பொன்மொழி :
சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். --ஜாக் கோர்ன்ஃபீல்ட்
பொது அறிவு :
1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் வாட்.
2. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது? | |
---|---|
பாதரசம் |
English words & meanings :
Urology - study of urine and it's tracts. Noun. சிறுநீர் மற்றும் அதன் பாதை குறித்த அறிவியல் படிப்பு
ஆரோக்ய வாழ்வு :
தொண்டை வலிக்கு முலேத்தி தேநீர் அதிசயங்களை செய்யும். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சிறிய துண்டு முலேத்தி வேரைச் சேர்க்கவும். இந்த கொதிக்கும் கலவையில் துருவிய இஞ்சியைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர், ஒரு கோப்பையில் கலவையை வடிகட்டி, ஒரு தேநீர் பையைச் சேர்த்து சாப்பிடலாம்.
NMMS Q :
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது
விடை : 70
நவம்பர் 09
அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்
அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.
நீதிக்கதை
புள்ளிமான்கள்
ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.
எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.
சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.
சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.
இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.
நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
இன்றைய செய்திகள்
09.11.22
* தமிழகத்தின் 17வது காட்டுயிர் காப்பகம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் அமைத்து அரசாணை வெளியீடு.
* 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
* தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள்: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்.
* தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
* பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை: இந்தியா தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு.
* பருவநிலை மாற்ற உச்சி மாநாடு தொடக்கம் - 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் எகிப்தில் குவிந்தனர்.
* அண்டத்தின் 'வைல்ட் டிரிப்லெட்' எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.
* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்: 12 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.
* கேலோ இந்தியா கைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்.
Today's Headlines
* Tamil Nadu's 17th Wildlife Sanctuary: An GO is issued to set it at Dharmapuri, Krishnagiri.
* Chief Minister M. K. Stalin has issued the Tamil Nadu Aerospace and Defense Industry Policy to provide employment to 1 lakh people in 10 years.
* 5093 relief camps are on standby: Information from Tamil Nadu Disaster Management Department.
* The Government of Tamil Nadu has issued an ordinance to set up an expert committee to enact laws for the implementation of social justice principles at all levels in Tamil Nadu government affairs.
* To abolish Anti-terrorist financing action: India-led international conference will be held in Delhi next week under the heading of India
* Climate Change Summit kicks off - More than 100 world leaders gathered in Egypt
* NASA's Hubble Space Telescope has captured a picture of two galaxies known as the 'Wild Triplet' of the universe.
* Asian Boxing Championship: India secures 12 medals
* KELO India Volleyball: Tamil Nadu Women's Team Champion.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment