பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 11.10.2022
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: வான் சிறப்பு
குறள் : 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
பொருள்:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
பழமொழி :
Whatever you do, do it properly.
செய்வன திருந்தச் செய்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன்.
2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்
பொன்மொழி :
எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!
பொது அறிவு :
1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது?
கிழக்கு சகாரா பாலைவனம்.
2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது?
ஜெர்மனி.
English words & meanings :
bio-ly-sis - the death and disintegration of living organisms. Noun. Banana peels take more time for biolysis. உயிரியல் சிதைவு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
துளசி இலைகளை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம் .இதனால் சொறி சிரங்கு போன்றவை முற்றிலும் குணமாகும்.
NMMS Q 72 :
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 9, 30, 51, 72, _________
விடை : 93. விளக்கம்: 9+21 = 30; 30+21 = 51; 51*21 = 72; 72+21= 93;
அக்டோபர் 11 இன்று
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.
நீதிக்கதை
உண்மைக்குக் கிடைத்தப் பரிசு
ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர்.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள்.
அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீர்ரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார்.
ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.
உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தர். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.
ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.
இன்றைய செய்திகள் - 11.10.22
* சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
* சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
* 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்.
* 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
* ரஷ்யா - உக்ரைன் போர்: கீவ் உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.
* பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும் 'சாம்பியன்'.
* தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்.
* டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
Today's Headlines
* Southern Railway has ordered to increase in the speed of 86 express trains from Chennai to Kudur from 110 to 130 mph.
* Weather forecast: Hefty rain warning for 9 districts in Tamil Nadu today.
* Union Minister of State for Health Bharati Praveen Pawar has said that AIIMS Hospital in Madurai will be completed by 2026.
* The Tamil Nadu Welfare and Rehabilitation Department Commissioner have warned that strict action will be taken against agents who illegally send youth abroad.
* Preparation of budget for the financial year 2023-24 begins.
* The 2022 Nobel Prize in Economics has been announced. The Nobel Prize is shared by three American scholars, Ben Bernaghe, Douglas Diamond, and Philip Dibwig.
* Russia-Ukraine war: Bombing hits cities including Kiev again
* Formula 1: Dutchman Verstappen is 'Champion' again.
* National Games: Tamil Nadu's Aarti wins bronze in the triathlon.
* T20 World Cup practice match: Team India beat Western Australia and won the match
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment