காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும்,1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த சில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான தகவல்களை பெற்றோருக்கு தெரிவித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம். ஆனால், முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெறக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment