தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்., 18 ஆக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன், அரசு விடுமுறை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு விடுமுறையை மாற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை, ஒரு நாள் முன்னதாக விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து, பஞ்சாங்க கணிப்பாளர்கள் கூறியதாவது: வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்., 18ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. தமிழகத்தில் இந்த பஞ்சாங்கத்தின் படிதான் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்தில், செப்., 19ல்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், தமிழக அரசு, எதன் அடிப்படையில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விடுமுறையை, செப்., 17ல் அறிவித்தது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு தனி கவனம் செலுத்தி, விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறையை செப்., 18க்கு மாற்றி வெளியிட வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரியுள்ளனர்.
0 Comments:
Post a Comment