03.11.2022 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாளான சதய விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வாண்டு கொண்டாடுப்படும் 1037 - ஆவது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு 03.11.2022 அன்று வியாழக்கிழமை , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

 இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 12.11.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 03.11.2022 வியாழக்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியார்களோடு இயங்கிடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment