11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!

 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!


01.10.2022 அன்று நடைபெறவிருக்கும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , தற்போது பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ஊக்கத்தொகை பெறும் பொருட்டு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.

மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்களாக அமையும் . ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். 

மேற்படி வினாக்கள் பத்தாம் வகுப்பு நிலையின் அடிப்படையில் அமையப்பெறும் . இலக்கணம் , அற இலக்கியம் , சங்க இலக்கியம் , தற்கால இலக்கியம் , உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்தல் , பொருத்துக , பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்தல் , சரியான / தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல் , கூற்று / காரணம் வினாக்கள் போன்ற வினாக்கள் கேட்கப்படும். 

மேற்படி தேர்வில் தேர்ச்சியுற்று தேர்ந்தெடுக்கப்படும் 1500 தேர்வர்களுக்கு மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டாண்டுகளுக்கு உதவித் தொகை தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படவுள்ளது.

மேற்படி தேர்விற்கு , அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி / தனியார் பள்ளி / CBSE / ICSE பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

09.09.2022 அன்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும் . எனவே , மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வெழுதி ஊக்கத் தொகை பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment