பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - 17.8.2022 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பு!

IMG_20220816_224415

IMG_20220816_224425

 மாணவர்களிடையே புத்தகம் வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் ஒவ்வொரு வாசிக்கும் பழக்கத்தை செயல்பட்டு நூலகப் பாடவேளை இப்பாடவேளைகளை வருகின்றன. வகுப்புக்கும் வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை தீட்டியுள்ளது. 
சிறந்த நூலகங்கள் இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8 , 9-10 , 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம் . அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம் . 

படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் . அதை வைத்து ஓவியம் வரையலாம் . நாடகம் நடத்தலாம் . கலந்துரையாடல் செய்யலாம் . நூல் அறிமுகம் , புத்தக ஒப்பீடு , மேற்கோள்கள் குறிப்பிடுதல் , கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் , புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும் . 

இவற்றில் படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர் . அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் . 

மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் . ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள் . இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும் . இந்நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் . 
மேலும் , மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

0 Comments:

Post a Comment