மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன. இந்த கோரிக்கையினை ஏற்று, உயர்கல்வித் துறை தற்போது இரண்டு நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.
எனவே, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கிக்கணக்கு விவரங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் மேற்கொள்ளுதல், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.
திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பிற வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..
0 Comments:
Post a Comment