Minority Scholarship Scheme: 2022- 23 கல்வியாண்டிற்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஆகிய மூன்று திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நல இயக்ககம் தெரிவித்துள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்:
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி பற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ/ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகைகள்:
இந்திய அரசு/மாநில அரசு/ அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த கல்வித் தொகையைப் பெற, மாணவர்கள் தங்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முதல் இரண்டு திட்டங்களிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விட குடும்ப வறுமைக்கு முக்கியத்துவம் அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மூன்றாவது திட்டத்தில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
முக்கியமான நாட்கள்:
பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு புதிதாக பதிய அல்லது புதுப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரை 30.09.2022 வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 31.09.2022 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கடந்த 2006ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச ஆதரவு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 100% நிதிப் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவ/ மாணவியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். மேற்படி, தகவல்களுக்கு minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment