பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டுதலில் , புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Click here to Join WhatsApp group for Daily kalvi news
0 Comments:
Post a Comment