02.07.2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைப்பெற்றது . இதன் தொடர்ச்சியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 ( சனிக்கிழமை ) அன்று மறுகட்டமைப்பை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது . மறுகட்டமைப்பு நடைபெறும் நாள் குறித்து பெற்றோர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட வேண்டும்
தொடக்கநிலை பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிகழ்வின்போது பார்வையாளர்கள் ( பள்ளிக் கல்வித்துறைமாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் ) நியமிக்கப்பட்டதைப்போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பார்வையாளர்களை நியமித்து இந்நிகழ்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட தலைமையாசிரியர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment