தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.
பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment