தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


IMG_20220614_204026


IMG_20220614_204041


2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 20.06.2022 - க்குள் 

http:/nationalawardstoteachers.education.gov.in 

என்ற இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது . 2021 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் முறையான பணியில் பணியாற்றி இருக்க வேண்டும் . ( 2021 ஏப்ரல் 30 வரை ) அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , ஆசிரியர்கள் 20.06.2022 க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழில் செய்தி வெளியிட்டு , குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தங்கள் அளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் , அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது . அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



0 Comments:

Post a Comment