தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல் பணிமாறுதல் கலந்தாய்வு .. மிக முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தொடக்ககல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அவற்றில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

எனினும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால் இதற்குரிய தேதி பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதனிடையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மாவட்டம்விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்றும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 8ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் புதியதாக காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால், அதனை நிரப்ப பதவி உயர்வு வழங்குவதற்கும், முன்பே பணி நிரவலில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 25/02/2022 ஆம் தேதிக்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும்தான் நடைபெறுகிறது.

2021-2022 பொதுமாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களை நீக்கவேண்டும். ஆனால் உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் போன்றவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை சார்பாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 21/06/22 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதனடிப்படையில் தான் முதன்மை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அப்பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென முன்னுரிமை பட்டியல் எப்பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ, அந்த பதவியில் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை வைத்து நிர்ணயம் செய்யப்படும் பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Comments:

Post a Comment