`ஒரு மாணவர் கூட இல்லாத 22 அரசுப் பள்ளிகள்’ - தொடக்கக் கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை. அதேபோல பல்வேறு பள்ளிகளில் ஒற்றை இலக்கங்களில் தான் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குநர் ஆசிரியர்கள் சங்கங்களில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாகப் பேசப்பட்டது. மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் ஆசிரியர் சங்கங்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

ஒரு மாணவர் கூட இல்லாத 22 பள்ளிகளில் பத்து மாணவர்களைச் சேர்த்தால் இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்த பள்ளிகளில் இரட்டை இலக்கத்தில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும். அதற்காக மாணவர் சேர்க்கை பேரணி நடத்தவும் தொடக்கக் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment