10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.70 லட்சம் பேர் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5 வயது ஆன மாணவர்களின் சேர்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்ந்த 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதற்கான காரணம் குறித்து கண்டறியப்படும். அத்துடன், அவர்கள் சிறப்பு தேர்வு எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விளையாட்டுத் துறையில் சிலம்பம் போட்டிக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் வழங்கியுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனிக் குழுவையும் முதல்வர் அமைத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


0 Comments:

Post a Comment