தன்னார்வலர்களின் கவனத்திற்கு..
நீங்கள் அனைவரும் உங்களிடம் பயிலக்கூடிய மாணவர்களுக்கு Baseline Survey செய்து வருகின்றீர்கள். சில பேர் அதை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில கருத்துக்களை உங்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
🔴ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 2 வகுப்புகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் .உதாரணமாக மூன்றாம் வகுப்பு பயிலக் கூடிய ஒரு மாணவன் தமிழ் பாடத்தில் உள்ள நான்கு கேள்விகளில் மூன்று கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருந்தால் (50% க்கு மேல் ) அம்மாணவனுக்கு Booster Level-ஆக நான்காம் வகுப்பு தமிழ் பாடம் சர்வேயில் ஓபன் ஆகும். இதனையும் அந்த மாணவன் முடித்தால் மட்டுமே தமிழ்பாடம் ஆனது முழுமையாக survey செய்யப்பட்டிருக்கும்.
🔴ஒருவேளை அம்மாணவன் மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கேட்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டுமே சரியாக பதில் அளித்திருந்தால் (50 % க்கு கீழ்) அம்மாணவனுக்கு முந்தைய வகுப்பான இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள LO மீண்டும் வலுவூட்டப்படும்.. இரண்டாம் வகுப்பு பாடத்திலும் 50 % கீழ் பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பு ஓபன் ஆகும். இதனை அம்மாணவன் முடிக்க வேண்டும். அப்போதுதான் அம்மாணவனுக்கு தமிழ் பாடத்தில் முழுமையாக சர்வே முடிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம்..
🔴இதேபோன்று ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் என அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 2 வகுப்புகளுக்கு சர்வே செய்யப்பட வேண்டும். அதாவது அந்த மாணவன் படிக்கக்கூடிய வகுப்பு மற்றும் அந்த மாணவனின் அடைவுத் திறனை பொருத்து அதற்கு முந்தைய வகுப்பு அல்லது அதற்கு அடுத்த வகுப்புக்குரிய வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே Baseline Survey-யானது முழுமையாக முடிக்கப்பட்டதாக கருத வேண்டும்.
பாடங்களில் உள்ள வண்ணங்களுக்கான விளக்கம்
🔴முதலில் ஒரு மாணவனுக்கு சர்வே ஆரம்பிக்கும் பொழுது அனைத்து பாடங்களும் சிவப்பு நிற வண்ணத்தில் இருக்கும். முதலில் ஒரு பாடத்தினை தேர்வு செய்து சர்வே மேற்கொண்டு அந்த மாணவன் அந்தக் குறிப்பிட்ட பாடத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சரியான விடைகளை அளித்திருந்தால் அப்பாடமானது சர்வே முடிக்கப்பட்ட உடன் பச்சை நிறமாக மாறிவிடும்..
🔴ஒருவேளை அந்தப் பாடத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான சரியான விடைகளை அளித்திருந்தால் அப்பாடமானது சர்வே முடிக்கப்பட்ட பின்பும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். உடனடியாக அம்மாணவருக்கு அதற்கு முந்தைய வகுப்பிற்கு survey மேற்கொள்ள வேண்டும். அதில் 50 % கும் மேற்பட்ட அடைவினைப் பெற்றால் மட்டுமே அந்த பாடம் பச்சை நிறமாக மாறும்....
அக்குறிப்பிட்ட மாணவன் அந்த குறிப்பிட்ட பாடத்தில் 50 சதவீத அடைவினை பெறும் வரை survey மேற்கொள்ள வேண்டும்.இதனை தன்னார்வலர்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது.
பச்சை நிற வண்ணத்தில் வந்தால் மட்டுமே ஒரு பாடத்தில் survey சரியாக முடிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
🔴அதே போன்று ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் 50 % அளவிற்கு கீழாக அடைவு பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பான ஏழாம் வகுப்பு பாடம் ஓபன் ஆகும். ஒருவேளை 50 % மேலாக அடைவினை பெற்றிருந்தால் அவனுக்கு அடுத்த வகுப்பிற்கான பாடம் ஓபன் ஆகாது...
மாநில இல்லம் தேடிக் குழு.
0 Comments:
Post a Comment