ஆன்லைன் மூலம் ஆசிரியக் கல்விக்கு அங்கீகாரம்: தேசிய கவுன்சிலின் புதிய முயற்சி

உயர்க் கல்வி நிறுவனங்கள்/ ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் கல்விப் படிப்புகளை அங்கீகரிப்பது தொடர்பான ஒட்டுமொத்த செயல்முறையையும் ஒழுங்குமுறைபடுத்த ஆன்லைன் தளத்தை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (National Council for Teacher Education (NCTE)  தொடங்கியுள்ளது.



நாட்டில் ஆசிரியர் கல்வி வழிமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக 1993 வருட சட்டத்தின் கீழ் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நிறுவப்பட்டது. மத்திய, மாநில உயர்க் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனங்களின் (DIETs) ஆசிரியர்ப் பாடங்களுக்கான அனுமதியை இந்த கவுன்சில் வழங்கி வந்தது.

இந்நிலையில், பாடங்களுக்கான விண்ணப்பக் கடிதம் பெறுவது  முதல் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, ஆய்வு மற்றும் தணிக்கை செய்வது தொடர்பான அத்துணை செயல்முறைகளும் இந்த புதிய தளத்தில் செயலாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி ( 4 Year Integrated Teacher Education Program) படிப்புக்கான செயல்முறையும் இந்த தளத்தின் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் இந்த தளத்தில்  நடைபெறும். உயர்க்கல்வி நிறுவனங்கள்  https://ncte.gov.in/Website/admin_Panel.aspx). 'நிர்வாக உள்நுழைவு' மூலம் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆய்வு மற்றும் தணிக்கை செய்வது தொடர்பான விபரங்களை தளத்தில் உள்ள VT portal மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த தளம் என்சிடிஇ-யின் செயல்பாட்டில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவரும். இது தன்னியக்க வலுவான கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவது எளிதாக்கப்படும் என்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

0 Comments:

Post a Comment