அரசு பள்ளிகளில், நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு :
அரசு பள்ளிகளில், நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த, அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த, அனைத்து வகையான ஆசிரியர்கள், முதலில்அடையாளம் காணப்படுவர். அவர்களுக்கு 'ஆன்லைனில்' அரை மணி நேர தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, வரும் 30, 31ம் தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நான்காம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையான, 25 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பயன் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment