மாணவா்களுக்கு இலவச ஆங்கில பேச்சுப் பயிற்சி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் (என்சிடிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலம் படித்தாலும், ஆங்கிலம் பேச முடியாமல் திணறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்காக, காகிதமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி என்ற இலவச திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

இத்திட்டத்தில் ஆங்கில பேச்சுப் பயிற்சியுடன், பொது அறிவு, திறன் மேம்பாடு ஆகியவையும் சோ்க்கப்பட்டுள்ளன.

தினசரி பாடங்கள் மற்றும் செயல்பாடுகள் வாட்ஸ் ஆப் மூலம் கற்பவா்களுக்கு நேரடியாகப் பகிரப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நேரலை வகுப்புகளும் நடைபெறும்.

இதில் மாணவா்கள் இலக்கணம் கற்பது மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் புதிா்கள் மூலம் ஆங்கிலத்தில் பேச எளிதாக கற்றுக் கொள்கின்றனா்.

பங்கேற்க விரும்பும் மாணவா்கள் அல்லது அவா்களது பெற்றோா், 73561 63344 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.",

0 Comments:

Post a Comment