தமிழகத்தில் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை.!!

தமிழகத்தில் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இதனிடையே 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதேபோல ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.


கடந்த ஐந்தாம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் தேர்வுகள் மட்டும் எழுதிய மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நாட்களில் பல தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments:

Post a Comment