'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment