13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியின், மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மாநில திட்ட இயக்குனர் சுதன் அனுப்பிய சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, தொழிற்கல்வி, முதுநிலை, உடற்கல்வி, கணினி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு, கணினி வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.


வரும், 14ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. தமிழகம் முழுதும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 13 ஆயிரத்து, 131 பேர் இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment