10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்; தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மாணவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்பொழுது தொற்று அதிகரித்துள்ளதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தடுப்பூசியை ஆர்வமாகச் செலுத்திக் கொள்கின்றனர்.
மேலும் தமிழகத்திற்கு கூடுதல் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பண்டிகை நாட்களின் போது, கோயில்களில் மக்கள் கூட்டமாகச் சேர்வதால் ஒமைக்ரான் பரவ வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஒமைக்ரான் வைரஸ் பொறுத்த வரை பிப்ரவரி மாதம் உச்சத்தை அடைந்து, பின்னர் படிப்படியாகக் குறையும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது என கூறினார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை முறையாகச் செலுத்த வேண்டும்” என வேண்டுகோள்விடுத்தார்.
0 Comments:
Post a Comment