EMIS மூலம் Transfer counseling apply செய்வது எப்படி? என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறுதல் கலந்தாய்வில் கூறப்பட்ட தகவல் மூலமாக இவ்வாறு தவறுதலாக ஆசிரியர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.தொடக்கக் கல்வி துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.2022க்குள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.
அலுவலகத்தில் EMIS Web Portal (https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard )- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள். கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி (copy) மட்டும் 07.01.2022க்குள் தலைமையாசிரியர் வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.
அலுவலகத்தில் EMIS Web Portal (https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard ) – இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள். கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.
0 Comments:
Post a Comment