தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து!!!

1044901

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுள்ளதாவது:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.

இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்! நல்வாழ்த்துகள்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதானது, நாடு முழுவதும் மொத்தம் 48 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில்

 சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில்

செப். 10-க்குள் வெளியாகும் என தகவல்

24-ஆம் தேதி அரசு கொள்கை முடிவு தாக்கல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் பணி செய்யும் ஆசிரியர்களுக்கான TET தேர்வை நடத்தியது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இத்தேர்வில் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை எழுதினார்கள்.

இதனிடையில் தேர்வர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்தது.

TET தேர்வு

செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முடிவிற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடையின் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி விடைக்குறியீட்டை தயார் செய்து அனைத்து OMR விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்துவிட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ஆகவே வருகின்ற 24-ஆம் தேதி தமிழ்நாடு TET தேர்வு மதிப்பெண் குறைப்பு தொடர்பான கொள்கை முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கும் போது, TET தேர்வு முடிவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

1044896

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆன்லைன் பத்திரப்பதிவு பணிகள் 5 கட்டங்களாக பிரிப்பு: புதிய வழிமுறைகள்

 தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், வீடு, மனை விற்பனை பத்திரப்பதிவு செய்யும் பணிகள் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், வரிசை முறைக்கான 'டோக்கன்' பெற வேண்டிய தேவை இல்லை என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பதிவுத்துறையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஆக., 17ல் தொடங்கப்பட்டது. புதிய வீடு மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி., எனப்படும் வீட்டுக் கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை, சார் - பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யலாம். இதற்கு தேவைப்படும் கருவிகளை, மக்கள் வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால், வீடு, மனை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று, பத்திரப்பதிவு செய்யலாம். புதிதாக வீடு, மனை வாங்குவோர், இந்த புதிய பத்திரப்பதிவு நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதில், மொத்தம் ஐந்து நிலைகளில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும். முதலில் சொத்து, அதை வாங்குவோர், விற்பவர், சாட்சிகள் குறித்த விபரங்களை பதிவேற்றம் செய்தல்; ஆதார் மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவேற்றம் செய்தல்; 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்துதல்; பதிவுக்கு தாக்கல் செய்தல்; சார் - பதிவாளர் அதை பதிவு செய்தல் என, ஐந்து நிலைகளாக இந்த பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான புதிய வழிமுறைகள்

முதல் கட்டம்

* சொத்து வாங்குவோர், பதிவுத்துறை இணையதளத்தில் தங்கள் பெயரில், 'லாக் இன்' உருவாக்கி, பதிவு செய்ய வேண்டிய பத்திர வகையை தேர்வு செய்ய வேண்டும்* பதிவு செய்யும் இடத்தில் விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு, 'வெப் கேமரா' கருவிகளின் வகை என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும்* சொத்தின் முன் ஆவண விபரங்களை உள்ளீடு செய்து, அதன் 'டிஜிட்டல்' பிரதியை பதிவேற்றம் செய்ய வேண்டும்* சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் குறித்த பெயர், முகவரி, அடையாள சான்று விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்* விற்பனை செய்யப்படும் சொத்து வீடா, மனையா என்பதை தேர்வு செய்து, அது தொடர்பான அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்* சொத்து அமைந்துள்ள சார் - பதிவாளர் அலுவலகம், கிராமம், சர்வே எண், பரப்பளவு, எல்லைகள், குறிப்புகள் போன்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்* சொத்து கைமாறும் மதிப்பு என்ன? அது எந்த வகையில் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்* அந்த சொத்து, தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும்* அந்த சொத்து தொடர்பான சட்ட நிலை, வழக்கு ஏதாவது நிலுவையில் உள்ளதா என்பதை குறிப்பிட வேண்டும்* இந்த விபரங்கள் அடிப்படையில், தானியங்கி முறையில் உருவாகும் வரைவு பத்திரம் பார்வைக்கு கிடைக்கும்* இதன் அடிப்படையில், பத்திரத்தின் சொத்து மதிப்பு சரிபார்க்கப்பட்டு, அதற்கான பதிவு கட்டணம், முத்திரை தீர்வை, கணினி கட்டணம், ஆவண எழுத்தர் நல நிதி விபரங்கள் திரையில் தோன்றும்* இதையடுத்து, வரைவு பத்திரம் சரி பார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்தால், இணையதளத்தில் அந்த பத்திரம், 'மை டாக்குமென்ட்ஸ்' பிரிவில் சேமிக்கப்படும்* இதன்பின், சொத்து வாங்குவோர், விற்பவர் அடையாள சான்றுகள், மனைப்பிரிவு வரைபடம், சொத்தின் புகைப்படம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்டம்

* இதை தொடர்ந்து, 'மை டாக்குமென்ட்ஸ்' பிரிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்திரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்* அடுத்து, ஆதார் சரிபார்ப்பு, விரல் ரேகை, புகைப்படம், கருவிழி ஆகிய, 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மூன்றாம் கட்டம்

* முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை, 'ஆன்லைன்' முறையில் செலுத்த வேண்டும்.

நான்காம் கட்டம்

* கட்டணம் செலுத்திய பின், பத்திர பதிவுக்கு, 'ஆன்லைன்' முறையில் தாக்கலுக்கு விண்ணப்பதாரர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர் நிலையில் பணிகள் முடிந்து விடும்.

ஐந்தாம் கட்டம்

* விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்த பத்திரம், இணைப்பு ஆவணங்கள், அடையாள சான்றுகளை சார் - பதிவாளர், 24 மணி நேரத்தில் சரி பார்த்து முடிவு எடுப்பார். இதன் அடிப்படையில், சார் - பதிவாளர் 'டிஜிட்டல்' கையெழுத்து போட்டு, பத்திரப்பதிவை முடித்து வைப்பார். இதன்பின், விண்ணப்பதாரர் தன், 'லாக் இன்' பிரிவை திறந்தால், அதில் பிரதி எடுப்பதற்கு ஏற்ற நிலையில் பத்திரம் தயாராக இருக்கும்.

சந்தேகங்களுக்கு உதவி

நேரில் வராமல், எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக எழும் சந்தேகங்களை பூர்த்தி செய்ய, பதிவுத் துறை தலைமை அலுவலகத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 1025174. பத்திரப்பதிவு தொடர்பாக விளக்கம் பெற, ஐ.ஜி., அலுவலகத்தில் வழங்கப்படும் ஆன்லைன் பயிற்சியை, கட்டுமான நிறுவனங்கள் பெற, https://igr.webex.com/igr/j.php?MTID=mcedac14f848a67e8be1042143f6a5cd2 இந்த இணையதள இணைப்பை பயன்படுத்தலாம்.

யோகா, இயற்கை மருத்துவம் முதுநிலைப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு (எம்.டி. யோகா & நேச்சுரோபதி) மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதியானவர்கள் செப்.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் www.tnayushselection.org என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதில் சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைனில் சமர்ப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரிக்கு செப்.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

1043472

தொடக்கக் கல்வி- உதவி பெறும் பள்ளிகள்-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது-பணியாளர் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல்-சார்ந்து

DEE - Aided school Staff fixation 2026-27 -Proceedings

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

6 முதல் 10ம் வகுப்பு வரை வரைவு பாடத்திட்டம் வெளியீடு

.com/

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான, 'தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025'ன் அடிப்படையில், புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் உருவாக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுநர் குழு, கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், 6 - 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு பாடத்திட்டம், https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இது குறித்து, கல்வியா ளர்கள், பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், https://tnschools.gov.inஇணையதளத்தில், வரும் 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு.

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பெறும் 48 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு.

புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அமுதாவும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மூலம் திறன் பயிற்சிகள்

 .com/

சட்​டப்​பேர​வை​யில் நேற்று சிறப்பு திட்ட செய​லாக்​கத்​துறை தொடர்​பான அறி​விப்பை முதல்​வர் விஜய் சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சி.ரமேஷ் வெளி​யிட்ட முக்​கிய அறி​விப்​பு​கள்: வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், வேலை​வாய்ப்​பற்ற இளைஞர்​களுக்கு தொழில் பாது​காப்​பு, தீ பாது​காப்​பு, தொழில்​சார் பாது​காப்பு, சுகா​தா​ரம், கட்​டு​மானபாது​காப்பு பயிற்​சிகள் அளிக்​கப்​பட்டு சர்​வ​தேச சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இதன் மூலம் இளைஞர்​களுக்கு உற்​பத்​தி, கட்​டு​மானம், உள்​கட்​டமைப்​பு, சரக்கு மற்​றும் போக்​கு​வரத்து, கிடங்​கு​கள், மருத்​து​வ​மனை​கள், தங்​கும் விடு​தி​கள், எரிசக்தி உள்​ளிட்ட துறை​களில் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

நடப்பு கல்வி ஆண்​டில் உயர் மதிப்​பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழகம் வாயி​லாக உலகளா​விய சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ் கல்​லூரி மாணவர்​களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்​சிகள் வழங்​கப்​படும்.Education

இ்த்​திட்​டத்​தின் கீழ், அப்​ளைடு டேட்​டாபேஸ் சிஸ்​டம், அட்​வான்​ஸ்டு எலெக்ட்​ரானிக்ஸ் மேனுபேக்​சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்​பு​கள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய,வேலை​வாய்ப்பு இல்​லாத ஐடி பட்​ட​தா​ரி​களுக்கு சர்​வ​தேச சான்​றிதழ் பயிற்சி மூலம் உள்​நாடு, வெளி​நாடு​களில் வேலை​வாய்ப்​பு​கள் பெறு​வதற்கு திட்​டம் உரு​வாக்​கப்​படும்.

நடப்பு கல்வி ஆண்​டில் உயர் மதிப்​பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழகம் வாயி​லாக உலகளா​விய சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ் கல்​லூரி மாணவர்​களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்​சிகள் வழங்​கப்​படும்.

இ்த்​திட்​டத்​தின் கீழ், அப்​ளைடு டேட்​டாபேஸ் சிஸ்​டம், அட்​வான்​ஸ்டு எலெக்ட்​ரானிக்ஸ் மேனுபேக்​சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்​பு​கள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய,வேலை​வாய்ப்பு இல்​லாத ஐடி பட்​ட​தா​ரி​களுக்கு சர்​வ​தேச சான்​றிதழ் பயிற்சி மூலம் உள்​நாடு, வெளி​நாடு​களில் வேலை​வாய்ப்​பு​கள் பெறு​வதற்கு திட்​டம் உரு​வாக்​கப்​படும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு அலுவலகங்களில் தற்காலிக ஒப்பந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 application

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநா், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கஹக்ஷ பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் எழ்-ஐஐஐ-3, பணியிடங்களுக்கான நபா்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா். இது குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் பூா்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செப்டம்பா் 15 மாலை 6 மணிக்குள் ரேஸ்கோா்ஸில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.